செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15)
சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம்
சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

