Last Updated:
டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீர் தீ விபத்து.
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று பிற்பகல் இண்டிகோ விமானம் பயணித்தது. இதில் சுமார் 200 பயணிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, விமானத்தின் உள்ளே புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், அச்சம் அடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பயணிகள், விமானப் பணிப் பெண்கள், விமானிகள் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுவர் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Chennai Flight Fire Accident | சென்னை விமானத்தில் தீ விபத்து
#ChennaiFlightFire #ChennaiAirport #FlightFire #AircraftFire #FlightIncident#News18TamilNadu #TamilNews https://t.co/pyYXLwoUNL— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 11, 2026
மேலும், இந்த விபத்து குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. தற்போதைய முதற்கட்ட விசாரணையில், பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த பவர் பேங்க் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பயணிகளின் தலை மேல் சிறிய பைகள் வைக்கும் ஓவர் ஹெட் பேகஜில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


