Last Updated:
சென்னை சேப்பாக்கத்தில் 23-ஆம் தேதி நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்தன.
சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், ஒரு மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. ரசிகர்களால் விறுவிறுப்பாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அறிவிக்கப்பட்டபடி, டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்குத் தொடங்கியது. ரூ. 1700 தொடங்கி 5 பிரிவுகளாக ரூ.7,500 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒருவர் 2 டிக்கெட்டுகள் தான் வாங்க முடியும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைனில் காத்திருந்தனர்.
இதனால், பெரும்பாலானவர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ரூ. 1700 ரூபாய் மதிப்பிலான ஒரு டிக்கெட், இணையத்தில் 21,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
March 19, 2025 11:51 AM IST
IPL Tickets | சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டி..! ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள்..!


