• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னை-க்கு மாஸ்டர் பிளான்.. வெளிநாட்டு நிபுணர்கள் களத்தில் இறங்கினர்.. எதற்காக? | Chennai 3rd Master Plan 2047: Vijay Government Pushes Vertical Development & Higher FSI with International Experts

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சென்னை-க்கு மாஸ்டர் பிளான்.. வெளிநாட்டு நிபுணர்கள் களத்தில் இறங்கினர்.. எதற்காக? | Chennai 3rd Master Plan 2047: Vijay Government Pushes Vertical Development & Higher FSI with International Experts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை-க்கு மாஸ்டர் பிளான்.. வெளிநாட்டு நிபுணர்கள் களத்தில் இறங்கினர்.. எதற்காக?

சென்னையை அடுத்த 20 வருடத்தில் தலைகீழாக மாற்றப்போகும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ள விஜய் தலைமையிலான அரசு வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பெருநகர பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் எப்படி மேம்படுத்தி உலக நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான முறையான மற்றும் நிலையான வளர்ச்சி பாதையை 3வது மாஸ்டர் பிளான் மூலம் உருவாக்கும் பணியை CMDA ஈடுப்பட்டு உள்ளது.

சென்னை-க்கு மாஸ்டர் பிளான்.. வெளிநாட்டு நிபுணர்கள் களத்தில் இறங்கினர்.. எதற்காக?

இதற்கான பணிகள் 2020ல் துவங்கிய நிலையில், விஜய் தலைமையிலான அரசு சில முக்கிய மாற்றங்களை செய்து தற்போது சர்வதேச டவுன் பிளானிங் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு செய்து இறுதி திட்டத்தை தீட்ட உள்ளது.

CMDA அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்த தகவல் படி, சென்னையின் 3வது மாஸ்டர் பிளானுக்கான அடிப்படை திட்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு இதை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் படி ஆய்வுக்கு பின்பு இறுதி ஒப்புதல் பெற்று, செப்டம்பர் மாதம் வெளியிடுவதற்கான பணிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 5 வருடமாக சுமார் 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் CMDA அமைப்பு சென்னையின் பெருநகர பகுதியின் வளர்ச்சிக்கா 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் சென்னை நகரின் அடுத்த 20 வருட வளர்ச்சி அதாவது 2047ஆம் ஆண்டுக்கான வளர்ச்சிக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் இத்திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நடைமுறை பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச நிபுணர்களின் ஆய்வுக்கு பின்பு உரிய மாற்றங்கள் செய்யப்பட்ட பின்பு அரசின் ஒப்புதலுடன் செப்டம்பர் மாதம் 3வது மாஸ்டர் பிளான் வெளியாகும். இந்த திட்ட வடிவமைப்புக்காக சுமார் 15 ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் அனைத்து தரப்பு மக்களுக்கான இணைப்பு, வருமான பங்கீடு, நில பயன்பாடு முறை, ப்ளூ – கிரீன் கட்டமைப்பு என பல விஷயங்கள் உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்து திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைவிட முக்கியமாக இந்த மாஸ்டர் பிளான் மூலம் சென்னையில் வான் அளவு உயரமான கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக சென்னையில் தற்போது பெரும்பாலான பகுதிகள் கிடைமட்ட அளவில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் நியூயார்க், லண்டன் போன்றவை செங்குத்து வளர்ச்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் FSI உயர உள்ளது.

Share This Article

English summary

Chennai 3rd Master Plan 2047: Vijay Government Pushes Vertical Development & Higher FSI with International Experts

The Tamil Nadu government under Chief Minister Vijay is finalizing Chennai’s 3rd Master Plan in collaboration with international town planning experts to guide the city’s growth for the next 20 years up to 2047. The plan focuses on shifting from horizontal to vertical development, increasing Floor Space Index (FSI), improving land use, and creating sustainable blue-green infrastructure to transform Chennai into a world-class city.

Story first published: Wednesday, July 1, 2026, 18:50 [IST]

Other articles published on Jul 1, 2026

Read More

Previous Post

டிசியை கேட்டு தகராறு செய்த மாணவன்.. பள்ளி முதல்வர் சொன்ன காரணம்.. அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அடுத்த 2 ஆண்டுகளில் சொந்தமாக ராக்கெட் தயாரிக்க மலேசியா திட்டம் – Malaysiakini

Next Post

அடுத்த 2 ஆண்டுகளில் சொந்தமாக ராக்கெட் தயாரிக்க மலேசியா திட்டம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin