சென்னையில் புதிய சிப்காட்.. எங்க தெரியுமா..? அதுவும் 800 ஏக்கர்.. இனி இந்த ஏரியா ரியல் எஸ்டேட் என்ன ஆகுமோ?
விஜய் தலைமையிலான அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டும் இதேவேளையில், தொழிற்சாலை அமைப்பதற்கான சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
திமுக ஆட்சியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா சென்னையை தாண்டி மற்ற நகரங்களிலும், மாவட்டத்திலும் அமைத்து மாநிலத்தின் வளர்ச்சி + வேலைவாய்ப்பை சமநிலைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

இந்த நிலையில், சமீபத்தில் விஜய் தலைமையில் கலெக்டர்கள் கொண்ட கூட்டம் நடந்தது, இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலுவையில் இருக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் 2024ல் இருந்து தேக்கம் அடைந்து வருவது தெரிய வந்த நிலையில், இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போது செய்யப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுதியில் இருக்கும் திருப்புலிவனம் – மருதம் கிராமங்களில் 803 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமாக ஏற்கனவே 470.51 ஏக்கர் நிலம் இருக்கும் வேளையில், மீதமுள்ள 332.50 ஏக்கர் நிலத்தை கைப்பற்றப்பட உள்ளது, இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது.
ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலத்தில் சிப்காட் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் இப்பகுதி மக்கள் மீண்டும் விவசாய நிலம் பாதிப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பிய காரணத்தால் தொழிற்பூங்க அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் காஞ்புரம் மாவட்டத்தில் திருப்புலிவனம் – மருதம் கிராமங்களில் 803 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே அதிகம் தொழிற்சாலைகள் கொண்ட நகரமாக இருக்கும் காரணத்தால் இப்பகுதியில் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் இப்பகுதியில் புதிய முதலீடுகளை ஈர்க்க சிப்காட் அமைக்கும் பணியில் துவங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஏற்கனவே 7 சிப்காட் இயங்கி வரும் வேளையில் 8வது சிப்காட் காஞ்சிபுரத்தில் வருகிறது. தமிழ்நாடு அரசு முன்பு வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கத்தில் 120 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்க அமைக்க திட்டமிட்டது, ஆனால் நில உரிமையாளர்கள் அதிக தொகை கேட்ட காரணத்தால் போதுமான நிலத்தை முழுமையாக பெற முடியாத காரணத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் திருப்புலிவனம் – மருதம் கிராமங்களில் கைப்பற்ற வேண்டிய 332.50 ஏக்கர் நிலத்தில் ஏரிகள், குளம், குட்டை, விவசாய நிலம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தான் விஜய் தலைமையிலான அரசு கைப்பற்றுமா என்ற கேள்வியும் பரந்தூர் விமான நிலையத்தின் ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர்.
இந்த விபரம் அனைத்தும் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் போது தெரிய வரும். இதன் பின்பு தான் நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல் அளிக்கும். மேலும் திருப்புலிவனம் – மருதம் கிராமத்தில் சிப்காட் வருவது உறுதியானால் இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு தாறுமாறாக உயரும்.
