• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? | Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? | Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியரான சுந்தர் பிச்சை. இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார், குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சி என்றால் மாணவர்கள் அனைவரும் இவரது பேச்சை கேட்க ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற மேடை ஏறினார். அப்போதே லேசாக சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தனது பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த சுமார் 200 மாணவர்கள் தங்களின் பட்டமளிப்பு உடைகளுடன் எழுந்து, அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு?  பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற $1.2 பில்லியன் மதிப்புள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஒப்பந்தத்தை வைத்துள்ளன. காசா பகுதியில் நடந்து வரும் போரில், இந்த தொழில்நுட்பங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடும் என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போரின் மூலம் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தங்களது குரலை உயர்த்தவே மாணவர்கள் இந்த வெளிநடப்பைச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் அரங்கிலிருந்து வெளியேறும்போது “Free Palestine” என முழக்கமிட்டுள்ளனர். சுந்தர் பிச்சை இந்த எதிர்ப்பைப் பற்றி தனது உரையில் நேரடியாக எதுவும் பேசவில்லை. பொதுவாக தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் தங்களது உரைகளில் செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் AI என்ற வார்த்தையையே தனது பேச்சில் பயன்படுத்தவில்லை.

அதற்குப் பதிலாக, நம்பிக்கையைத் தேர்ந்தெடுங்கள் (Choose Optimism) என்ற தலைப்பில் பேசிய சுந்தர் பிச்சை, ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்குரிய சவால்களையும் கடினமான காலங்களையும் சந்தித்துதான் வந்துள்ளது. நாம் எந்த மாதிரியான உலகிற்குள் நுழைகிறோம் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் நம் சூழ்நிலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த போது தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு, செய்தியாளர் ஒருவர் சுந்தர் பிச்சையிடம், மாணவர்கள் உங்களுக்கு எதிராக நடத்திய இந்த போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார். ஆனால், சுந்தர் பிச்சை அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல், அமைதியாக வெளியேறிவிட்டார். அமெரிக்க பல்கலைகழங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்கள் வெளிப்படையாக சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

English summary

Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? மேடையில் பேச தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?- Over 100 Stanford graduates staged a dramatic walkout moments after Google CEO Sundar Pichai began his 2026 commencement speech, protesting Google’s $1.2 billion Project Nimbus cloud computing and AI contract with the Israeli government.

Story first published: Monday, June 15, 2026, 11:30 [IST]

Other articles published on Jun 15, 2026

Read More

Previous Post

Yemen Indian Embassy | “கப்பலில் உயிரிழந்த தமிழரின் உடல், விரைவில் அனுப்பி வைக்கப்படும்” – ஓமன் இந்திய தூதரகம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பிரேசில்: பாதுகாப்பு கயிறு இல்லாமல், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! | World News (உலக செய்திகள்)

Next Post
பிரேசில்: பாதுகாப்பு கயிறு இல்லாமல், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! | World News (உலக செய்திகள்)

பிரேசில்: பாதுகாப்பு கயிறு இல்லாமல், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin