
சுரேஷ் ராஜரத்தினம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் மத ஆடை (சீவரம்) அகற்றப்பட்ட சம்பவத்திற்குக் கண்டிப்புத் தெரிவிக்கும் வகையில், ஹாலிஎல பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஹாலிஎல பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றபோதே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஞானசார தேரரின் மத ஆடை அகற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளமாகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்துகொண்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவித்தனர்.
ஹாலிஎல பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை, குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கண்டனக் குரலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









