• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீறிப் பாய்ந்து வரும் காவிரி நீர்.. இன்று இரவே தமிழக எல்லையை எட்ட வாய்ப்பு.. விவசாயிகள் உற்சாகம்! | Cauvery Water Surge: Heavy Inflows from Karnataka to Reach Tamil Nadu Border by Tonight

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சீறிப் பாய்ந்து வரும் காவிரி நீர்.. இன்று இரவே தமிழக எல்லையை எட்ட வாய்ப்பு.. விவசாயிகள் உற்சாகம்! | Cauvery Water Surge: Heavy Inflows from Karnataka to Reach Tamil Nadu Border by Tonight
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Updated: Sunday, August 2, 2026, 22:18 [IST]

சென்னை: கர்நாடகால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினியில் அதிக நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் நீர்திறப்பு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​ சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்கும் நீர்வரத்து இன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.

Cauvery Water Surge Heavy Inflows from Karnataka to Reach Tamil Nadu Border by Tonight

உத்தரவை பின்பற்றாத கர்நாடகா

இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்முறையீடு செய்​தது.

கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகம் – கர்​நாடகா இடையே மோதல் முற்​றி வந்தது.

கனமழை

இந்நிலையில், ஜூலை 31 ஆம் தேதி முதல் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

கபினி அணைக்கு நீர்வரத்து வேகமாக நிரம்ப தொடங்கியது. கடல் மட்​டத்தில் இருந்து 2,284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் நேற்று பிற்​பகல் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இரவில் 25,000 கனஅடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால், நீர்திறப்பு சுமார் 17,000 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கபினி அணையில் நீர்வரத்து உயர்ந்தது

கபினி அணை​யில் இருந்து நீர் திறக்​கப்​பட்​ட​தால் காவிரி ஆற்​றில் வெள்ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், காவிரி கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்துள்ளது. ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில் அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது. வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. தற்போது விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று இரவே தமிழக எல்லைக்கு

இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று காலை 500 கன அடியாகவும், மாலையில் அது 600 கன அடியாகவும் இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து 500 கன அடியாக இருந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இன்று ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியிலிருந்து 47 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரும்போது நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary

Following heavy rainfall in the Cauvery catchment areas of Karnataka and the subsequent release of a large volume of water from the Kabini reservoir, water is surging rapidly down the Cauvery River. It is expected to reach Biligundlu, at the Tamil Nadu border, by tonight or tomorrow morning.

Read More

Previous Post

ரஷ்ய அணுமின் நிலையத்தை அதிர வைத்த உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

Next Post

சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி: அவசர சீர்திருத்தங்களுக்கு அழைப்பு – Sri Lanka Tamil News

Next Post
சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி: அவசர சீர்திருத்தங்களுக்கு அழைப்பு – Sri Lanka Tamil News

சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி: அவசர சீர்திருத்தங்களுக்கு அழைப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin