சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று அவரின் மூக்கில் ஊர்ந்து செல்வதை உணர்ந்திருக்கிறார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தூங்கத் தொடங்கியபோது அசௌகரியமாக உணர்ந்து திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். அப்போது, அவரின் தொண்டையின் உள்பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றிருக்கிறது. ஆனால், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவம் நடந்த இரண்டாவது நாள், அவருக்கு மஞ்சள் நிறத்தில் சளி வந்திருக்கிறது.

மருத்துவ பரிசோதனை
மேலும், சுவாசிக்கச் சிரமப்பட்டிருக்கிறார். உடனே அவர், மருத்துவ நிபுணரைச் சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார். மருத்துவரும், தொண்டை, மூக்கு போன்ற பகுதிகளைச் சோதனை செய்துவிட்டு, “எதுவும் இல்லை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், “எதோ ஒன்று இருக்கிறது…”‘ என உணர்ந்த அந்த முதியவர், சுவாசக் கோளாறு தொடர்பான தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அந்த மருத்துவர், முதியவரை சி.டி. ஸ்கேன் செய்து சோதித்திருக்கிறார். அப்போதுதான், வலது மார்பு கூட்டின் உள்பகுதியில், நுரையீரல் அருகில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது.

