Last Updated:
இந்த அபூர்வக் காட்சிகளை பறவை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
சீனாவில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஒன்றாகக் கூடி வானில் வட்டமிட்டுப் பறந்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.
கிழக்கு ஆசியா முதல் ஆஸ்திரேலியா வரையிலான இடம்பெயர் பறவைகளின் முக்கிய வழித்தடத்தில் சீனாவின் மஞ்சள் நதி டெல்டா சதுப்புநிலப்பகுதி அமைந்துள்ளது. இது பறவைகளின் பாதுகாக்கப்பட்ட சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது. தற்போது இலையுதிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இங்குள்ள பரந்த சதுப்புநிலப் பகுதிக்கு லட்சக்கணக்கான பறவைகள் வருகை தந்துள்ளன. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் எண்ணற்ற பறவைகள் ஒன்றாகக் கூடி வானில் வட்டமிட்டுப் பறந்தன.
வானில் ஒன்று கூடுவதும், பிரிந்து சுழல்வதுமாகச் சிறகடித்துப் பறந்த காட்சி, கடலில் எழும் பிரமாண்ட அலைகளைப் போல காட்சியளித்தது. சீன புராணங்களில் குறிப்பிடப்படும் ‘குன்’ (Kun) எனப்படும் பிரமாண்டமான மீன் ஒன்று நீல வானத்தில் நீந்தி செல்வது போன்ற மாயாஜாலக் காட்சியை இது உருவாக்கியதாகக் கண்டுகளித்தவர்கள் மெய்சிலிர்த்தனர்.

