போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவல்துறையினர் கண்டறியும் பின்னணியில் சிறைச்சாலை மோதல்கள் குறித்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் (Shiran Basik) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை அறிக்கைகள் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளன.
அரசியல் அதிகாரத்திற்கும் பாதாள உலகிற்கும் இடையிலான இந்த இருண்ட தொடர்பு முழு நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய கோணத்தில் விசாரணை
இதைவிட மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இரத்தக் கறை படிந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளுக்குப் பின்னணியிலும் இவரது தொடர்பு ஏதேனும் இருந்ததா என்பதுதான்.

சிறைச்சாலைக்குள்ளேயே தனது எதிரிகளைப் படுகொலை செய்யும் அளவுக்கு இவர் சக்திவாய்ந்தவராக இருந்தாரா என்பது குறித்து தற்போது புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மு குறித்த சந்தேகநபரின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் எம்.னி அருந்திக்க பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக (CCIB) அதிகாரிகள் நீண்ட வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்திருந்தது.
மேலும், ஷிரான் பாசிக் ஒரு சாதாரண பாதாள உலகக் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் மிகச்சிறந்த ஆதாரம் இதுவே.
⠀
அவர் துபாயில் தங்கியிருந்தபோது ஹெலிகாப்டர் ஓட்டுவதில் சிறப்பு விமானிப் பயிற்சி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது.
⠀
போதைப்பொருள் கடத்தல்
ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வானத்தை இப்படி ஆள ஏன் பயிற்சி அளிக்கப்பட்டது?
⠀
இது சர்வதேச அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு புதிய முறைக்கானதா?
⠀
அல்லது, கொலம்பிய பாதாள உலகத் தலைவரான பாப்லோ எஸ்கோபரைப் போல, அவசர காலத்தில் எல்லையைக் கடந்து தப்பிச் செல்லும் நோக்கில் தனக்கென சொந்தமாக திட்டத்தை உருவாக்குகிறாரா?
⠀
இந்த சந்தேகங்கள் நீளும் நிலையிவ் பாதுகாப்புப் படையினர் தற்போது இவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

