Last Updated:
பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாகவும், உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்துடன் புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது, இந்தியா மீதான உலகின் நம்பிக்கைக்கு மற்றொரு முக்கிய சான்று என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நிலையில், இந்தியா மீதான நம்பிக்கை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யஷோபூமி வளாகத்தில் மூன்று நாள் ‘செமிகான் இந்தியா – 2026’ மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் செமிகண்டக்டர் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளதாகவும் செமிகண்டக்டர் உற்பத்தியின் முனையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுவரை நாட்டில் 12 செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சிப் உற்பத்திக்கான புதிய மற்றும் நம்பகமான உற்பத்தி மையங்களை உருவாக்கி, இந்தியா தன்னைத் தயார்படுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.
VIDEO | Delhi: Prime Minister Narendra Modi inaugurates SEMICON India 2026 and says, “India’s quarterly GDP report was released in September itself, and even during this challenging period, India achieved 7.8 per cent growth. During the same period, Japan’s credit rating agency… pic.twitter.com/i1K8ZXr1f1
— Press Trust of India (@PTI_News) September 17, 2026
“கடினமான காலக்கட்டத்திலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, இந்தியாவின் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை செப்டம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டது. இந்த சவாலான காலகட்டத்திலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில், ஜப்பானின் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அரசுக் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, அதாவது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. ஒருபுறம், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மறுபுறம், இந்தியா மீதான உலகின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.


