கடத்திக்கொலை?
பின்னர் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ்ச் செல்வன் வேறொரு சமூகத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி பழகியதாக தெரிகிறது.
அந்த மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வனை கண்டித்து மிரட்டி உள்ளார். ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது, அவர் தமிழ்ச்செல்வன் கையை பிடித்து திருகி தாக்கியுள்ளார். அந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது மகளுடன் பழகிய ஆத்திரத்தில் தமிழ்ச்செல்வனை கடத்திக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம், அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
மேலும், சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனுடன் இருந்த நண்பர்களையும் விசாரிக்க வேண்டும். போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றால், உடலை வாங்கமாட்டோம். பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றனர்.
மாணவியுடன் பழகியதால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்திருந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையில் மதுரை ஆனையூர் கழிவுநீர் குட்டையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவனது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்தாகவும், மார்பில் கடித்ததற்கான அடையாளம் மற்றும் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
