சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, பல்லேகம ஹேமரதன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, நீதிமன்ற பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டு பயணத்தடை
எனினும் இது குறித்து வெளியாகிய தகவலில் பல்லேகம ஹேமரதன தேரர் சட்டத்தரணியின் காரில் ஏறி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியொருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைய மே மாதம் 08 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேகநபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன அப்போது உத்தரவிட்டார்.
இதேவேளை, சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிறுமியின் தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

