• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது… அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ – சொல்கிறார் சேவாக் | Siraj has a spark negligence hurts him says Sehwag ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது… அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ – சொல்கிறார் சேவாக் | Siraj has a spark negligence hurts him says Sehwag ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தன்னுடைய முந்தைய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நல்ல வேகத்துடன் தீப்பொறி பறக்க வீசினார். குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

7 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக ஆடி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியமே கதி என்று இருந்த சிராஜ், அந்தப் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக உணர்ச்சிவயப்பட்டுக் காணப்பட்டார். ஆர்சிபி அணி எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்று சிராஜ் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிராஜ் பற்றி விரேந்திர சேவாக் கூறுகையில், “அந்த ஆட்டத்தில் முதலில் 3 ஓவர்கள் வீசினார், தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசியிருந்தால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பார். அவரிடம் இன்னும் அந்த தீப்பொறி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டதால் அவர் நிச்சயம் மனம் புண்பட்டிருப்பார். அதனால்தான் தீப்பொறி பறக்க வீசி பெவிலியனை நோக்கி செய்கையெல்லாம் செய்து காட்டினார்.

ஒரு வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து இத்தகைய வேகத்தையும் ஆக்ரோஷத்தையும்தான் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார் சேவாக்.

ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகே சிராஜை சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து கழற்றி விட்டார்கள். பழைய பந்தில் சிராஜ் அவ்வளவு நன்றாக வீசுவதில்லை என்று ரோஹித் சர்மா அதற்கான காரணமாகக் கூறினார். இது ஒரு காரணமே அல்ல. ரோஹித் சர்மா புள்ளி விவரங்கள் தெரியாமல் உளறினார் என்பதை சிராஜ் பிற்பாடு புள்ளி விவரங்களுடன் நிரூபித்தார்.

“நான் பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன், கடந்த ஆண்டில் உலகின் 10 வேகப்பந்து வீச்சாளர்களில் பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன். என்னுடைய சிக்கன விகிதமும் குறைவே. எண்கள் பேசும். நான் புதிய, பழைய பந்துகள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” என்று ரோஹித் சர்மாவுக்கு சூசகமாகப் பதிலடி கொடுத்தார் சிராஜ்.

இந்நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபியில் அவரை தேர்வு செய்யாததால் சிராஜ் மனம் புண்பட்டது என்றும் அதனால் அவர் பந்து வீச்சில் தீப்பொறி தெறிக்கிறது என்றும் சேவாக் கூறி தன் ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.



Read More

Previous Post

’நீட் பயத்தால் ஒரு மாதத்தில் 4 உயிர்கள் பலி! என்ன செய்ய போகிறது அரசு!’ மருத்துவர் ராமதாஸ் சரமாரி கேள்வி!

Next Post

Meengal App: “மீன் வாங்க மார்கெட் மார்கெட்டா அலைய தேவையில்லை” – App மூலம் வீட்டில் இருந்தபடியே மீன்கள் வாங்கலாம்…

Next Post
Meengal App: “மீன் வாங்க மார்கெட் மார்கெட்டா அலைய தேவையில்லை” –  App மூலம் வீட்டில் இருந்தபடியே மீன்கள் வாங்கலாம்…

Meengal App: “மீன் வாங்க மார்கெட் மார்கெட்டா அலைய தேவையில்லை” - App மூலம் வீட்டில் இருந்தபடியே மீன்கள் வாங்கலாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin