Last Updated:
CBSE Three Language Policy | நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டு முதல் 6 ஆம் வகுப்புகளில் மும்மொழிப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டு முதல் 6 ஆம் வகுப்புகளில் மும்மொழிப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்கள் இரு இந்திய மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்றும் ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே படிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் பிராந்திய மொழிகள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்பதால் மாணவர்கள் இரு இந்திய மொழிகளில் ஒன்றாக, கட்டாயமாக இந்தியை கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் மொழிகளை பயிற்றுவிப்பதை விடுத்து ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், இரு பிராந்திய மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
Delhi,Delhi,Delhi
May 28, 2026 12:00 PM IST


