பிசிசிஐ தரப்பில் கூறப்படுவது என்ன?
“ரோஹித் இன்னும் சில கிரிக்கெட் விளையாடலாம் என்று நம்புகிறார். அவர் எதிர்காலத் திட்டங்களைத் தெரிவிக்கச் சொல்லப்பட்டுள்ளது. ஓய்வு எடுப்பது அவரது முடிவு, ஆனால் கேப்டன் பதவியைத் தொடர்வது குறித்து மேலும் ஒரு விவாதம் இருக்கும். அணியை உலகக் கோப்பைக்காகத் தயார் செய்ய வேண்டுமானால், நிலையான கேப்டன் தேவை என்பதை ரோஹித் தானே புரிந்து கொண்டுள்ளார். கோலியுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் அவரைப் பற்றி அதிக கவலை இல்லை,” என்று பிசிசிஐ தரப்பைச் சேர்ந்த ஒருவர், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்குத் தெரிவித்துள்ளார்.

