• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாமர சம்பத் கைதானது ஏன்? | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாமர சம்பத் கைதானது ஏன்? | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.


இரத்தின வியாபாரிகளிடம் இலஞ்சம் கோரிப் பெற்றதாகவும், பொஸ்பேட் ஏற்றுமதியில் ஈடுபட்ட நிறுவனங்களிடமிருந்து பல மில்லியன் ரூபாய் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதன்படி, இரத்தின வியாபாரி ஒருவரிடம் 12 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய அவர், அதில் 5 இலட்சம் ரூபாயைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு இரு இரத்தின வியாபாரிகளிடம் முறையே 10 இலட்சம் மற்றும் 2 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மற்றொரு குற்றச்சாட்டின்படி, லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் ஊடாக பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்காக மூன்று நிறுவனங்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்றுமதி ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும் சாமர சம்பத் உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதற்குப் பிரதியுபகாரமாக, அந்த நிறுவனங்கள் முறையே 59 இலட்சம், 22 இலட்சம் மற்றும் 3 இலட்சம் ரூபாய் என மொத்தம் 84 இலட்சம் ரூபாயை வழங்கியதாகக் கூறப்படுகிறது.


இந்தப் பணம், அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு, சாமர சம்பத்தின் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சாமர சம்பத் தசநாயக்க, திங்கட்கிழமை (ஒக்டோபர் 12) பிற்பகல் 1.16 மணியளவில் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்தப் பொஸ்பேட் ஏற்றுமதி தொடர்பான விசாரணையில், அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுமதிபால லியனாராச்சியும் முன்னதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.




Read More

Previous Post

2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய வரம்பிலிருந்து MSME-களுக்கு விலக்கு அளிப்பது சமத்துவமின்மையை உருவாக்கும்; ஹம்சா எச்சரிக்கை | Makkal Osai

Next Post

மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்! | 4 burnt alive as EV car catches fire after crash in Andhra

Next Post
மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்! | 4 burnt alive as EV car catches fire after crash in Andhra

மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்! | 4 burnt alive as EV car catches fire after crash in Andhra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin