இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேராவை சற்று முன்பு கைது செய்துள்ளது.
அவர் NLB தலைவராக இருந்த காலத்தில் இருந்துவரும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரின் வீட்டில் பணியாற்ற அமர்த்தப்பட்ட அரச அதிகாரிகள்
தேசிய லொத்தர் சபைக்கு மூன்று அதிகாரிகளை நியமித்து, அலுவலகத்தில் பணியாறறுவதற்கு பதிலாக அவர்களை அப்போதைய அமைச்சர் ரவி கருணநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற வைத்ததன் மூலம் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

