வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
“வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்” ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச விசாரணையேதேவை என்பதை வலியுறுத்த மாநாடு
இலங்கை அரசிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எவ்வித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இம்மாநாடு அமையவுள்ளது.

மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு
இம்மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்
நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

