சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர்
பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வை சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு
செய்துள்ளனர்.
இதன்போது, சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக
தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட
மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட 57 பொதுமக்கள்
இதில் சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
1990.07.07 அன்று சம்பூர் பகுதியில் வைத்து ஊர் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தில் 57 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் இருவர்
படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

