• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள் | Ghibli animation photos are going viral on social media

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள் | Ghibli animation photos are going viral on social media
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்​றைய நவீன யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் முழு ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த ‘கிப்​லி’(Ghibli) ஆர்ட் எனப்​படும் அனிமேஷன் புகைப்​படங்​கள்​தான்.

ஜப்​பானைச் சேர்ந்த ‘ஸ்​டூடியோ கிப்​லி’ என்ற நிறு​வனம் தயாரித்த அனிமேஷன் திரைப்​படங்​கள் உலகம் முழு​வதும் பிரபல​மானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்​களுக்கு உலகம் முழு​வதும் தனி ரசிகர் பட்​டாளம் உள்​ளது. கற்பனை​யாக நினைக்​கும் மன ஓட்​டங்​களுக்கு உரு​வம் கொடுப்​ப​தால், இந்த கிப்லி ஆர்ட் அனை​வரை​யும் கவர்ந்து விடு​கிறது.

இந்​நிலை​யில், செயற்கை நுண்​ணறி​வு(AI) தொழில்​நுட்​பத்​தில் நம்​முடைய சாதாரண டிஜிட்​டல் புகைப்​படங்​களை சில நொடிப்​பொழு​தில் கிப்லி அனிமேஷன் புகைப்​ படங்​களாக மாற்​றி​விடும் அப்​டேட் வந்​துள்​ளது. அந்த அப்​டேட்​தான் இன்​றைய சமூக வலை​தளங்​கள் முழு​வதும் கிப்லி புகைப்​படங்​களாக நிறைய வைத்​துள்​ளது.

ஓபன் ஏஐ நிறு​வனத்​தில் சாட் ஜிபிடி(Chat GPT) மூல​மும், எலன் மஸ்க்​கின் எக்ஸ் தளத்​தில் உள்ள ‘க்ரோக்​’ (Grok) மூல​மும் இந்த கிப்லி அனிமேஷன் புகைப்​ படங்​களை எந்​த​வித கட்​ட​ண​மும் இல்​லாமல் செய்​து​விட முடிகிறது. இதில், டிஜிட்​டல் புகைப்​படங்​களை உள்​ளீடு செய்​து, கிப்லி அனிமேஷ​னாக மாற்​றக் கோரி​னால், சில நொடிகளில் தயாரித்து கொடுக்​கிறது. இது பார்ப்​போரை கவரும் வண்​ணம் உள்​ள​தால், அனை​வரும் தங்​களது சமூக வலைதள பக்​கங்​களில் பதி​விட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சமூக வலை​தளங்​களில் சக்​கை​போடு போடும் இந்த கிப்லி அனிமேஷன் புகைப்​படங்​கள் அரசி​யல்​வா​தி​களை​யும் கவர்ந்​துள்​ளன. இந்​திய அரசின் MyGov, இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் 15 படங்​கள் கிப்லி அனிமேஷனில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு பதி​விடப்​பட்​டுள்​ளன. இதில், அவர் இந்​தி​யக் கொடியை ஏந்​தி​யிருப்​பது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்​தித்​தது, அயோத்​தி​யில் உள்ள ராம் லல்லா சிலைக்கு முன் உரை நிகழ்த்​து​வது, வணங்​கு​வது என பல புகைப்​படங்​கள் கிப்லி அனிமேஷ​னாக பதி​விடப்​பட்​டுள்​ளன.

இதே​போல, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நாடாளு​மன்​றத்​தில் பேசும் கிப்லி பாணி புகைப்​படத்​தை​யும், பாஜக தனது சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​துள்​ளது.

மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர ஃபட்​னா​விஸ், காங்​கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்சி பிர​முகர்​கள் இந்த வைரல் ட்ரெண்​டிங்கில் களம் இறங்​கி​யுள்​ளனர். மேலும், காங்​கிரஸ் கட்சி சமூக வலைதள பக்​கத்​தில் “சுதந்​திரப் போராட்​டத்​தில் இருந்து இந்​தி​யா​வுடன் இணைவதற்​கான காங்​கிரஸின் பயணம்” என மகாத்மா காந்​தி, நேரு, இந்​திரா காந்​தி, சோனியா காந்​தி, ராகுல் காந்தி உள்​ளிட்​டோரின் படங்​கள் கிப்லி அனிமேஷன் படங்​களாக பதி​விடப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், அதி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி​யும் இந்த கிப்லி ட்ரெண்​டிங்கில் இணைந்து அசத்​தி​யுள்​ளார். கிப்லி பாணியி​லான தனது புகைப்​படங்களை எக்ஸ் பக்​கத்​தில் பகிர்ந்​துள்ள அவர், “தமிழகத்​தின் இதயத்​தில் இருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை- எனது மிக​வும் மறக்​க​முடி​யாத சில தருணங்​களை காலத்​தால் அழி​யாத கலை​யுடன் கலக்​கிறேன்” என பதி​விட்​டுள்​ளார்.

கிப்லி அனிமேஷன் ட்ரெண்​டிங்​கில் உள்​ள​தால், பல தனி​யார் நிறு​வனங்​களும் இந்த கிப்லி புகைப்​படங்​களை மாற்​றும் செயலியை உரு​வாக்கி வரு​கின்​றன. எனவே, இந்த செயலிகளில் தங்​களது தரவு​களை உள்​ளீடு செய்​யும்​போது, தனிப்​பட்ட தகவல்​கள் பாது​காப்​பாக இருப்​பதை உறு​தி செய்​து பயன்​படுத்​த வேண்​டும்​ என்​ப​தில்​ கவன​மாக இருப்​பது அவசியம்​.



Read More

Previous Post

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!

Next Post
ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!

ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin