Last Updated:
ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. புதிய விதிகளின்படி அபராதம் பெறும் முதல் கேப்டனாக அவர் மாறினார்.
ஐபிஎல் தொடரில் பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதின. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதலில் ஆடிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் மெதுவாக பந்துவீசும் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிப்பதுடன் நன்மதிப்பு புள்ளிகளைக் குறைக்கும் முறை அமலாகியுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி அபராதம் பெறும் முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா மாறியுள்ளார். மெதுவாக பந்துவீசியதற்காக அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் இதேபோல் மெதுவாக பந்து வீசியதால், இந்த ஆண்டின் முதல் லீக் போட்டியில் பங்கேற்க ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 30, 2025 3:45 PM IST


