Last Updated:
உத்தரப்பிரதேசம் மேலவைத் தேர்தலில் 6 இடங்களை பாஜக வென்றது. சமாஜ்வாதி 5 இடங்களை வென்றது. முறைகேடு புகாரும் கொண்டாட்டமும் ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 11 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக ஆறு இடங்களையும், சமாஜ்வாதி ஐந்து இடங்களையும் கைப்பற்றியது. குறிப்பாக அடுத்தாண்டு அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், மேலவை தேர்தல் முடிவுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “பெரிய ஆரவாரத்துடன் களமிறங்கியவர்கள் (பாஜக) படுதோல்வியைச் சந்தித்தனர். கணக்கெடுப்பின்படி பார்த்தால், அவர்கள் வென்றது வெறும் 6 இடங்கள் மட்டுமே, ஆனால் 50 மாவட்டங்களில் அவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
பாஜகவினர் நேர்மையற்றவர்கள் என்பது இப்போது பொதுமக்களுக்குத் தெரிந்துவிட்டது. சமாஜ்வாதி கட்சியினர் மக்களின் பலத்தால் வெற்றி பெறுகின்றனர். அதேசமயம், பாஜகவினர் தந்திரம் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாளாமல் இருந்திருந்தால், ஒருவேளை இத்தனை இடங்களைக் கூட அவர்களால் வென்றிருக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
#WATCH | Lucknow: Over recent MLC elections, Samajwadi Party President Akhilesh Yadav says, “Dhoom dham machane wale log dhum se gir gaye…There were 5 seats in the count, but these people have lost in 50 districts. It’s now known among the common public that people from the BJP are dishonest. People from SP win due to the strength of the people, and these people have won 6 seats through deceit. If they hadn’t resorted to deceit, they probably wouldn’t have won even these many seats…”
— ANI (@ANI) October 30, 2026
இதற்கு பதில் கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா, “மேலவை (MLC) தேர்தல்கள் குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் முறைகேடுகள் நடந்ததாகக் கூறுகின்றனர். இந்த குழப்பம் எதற்கு?
#WATCH | Delhi: BJP National Spokesperson and MP Sambit Patra says, “On MLC elections, SP leaders said that there have been malpractices. What is this confusion? On one hand, SP is celebrating victory on 5 seats and on the other hand, it is making allegations about the results in 6 other seats. If there was a malpractice, why are you celebrating? File a complaint…”
— ANI (@ANI) October 30, 2026
ஒருபுறம், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுகிறது; மறுபுறம், மற்ற 6 இடங்களின் முடிவுகள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. முறைகேடு நடந்திருந்தால், பிறகு ஏன் கொண்டாடுகிறீர்கள்? புகார் அளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


