• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சபாநாயகருக்கு எதிராக வெள்ளி நம்பிக்கையில்லா பிரேரணை

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சபாநாயகருக்கு எதிராக வெள்ளி நம்பிக்கையில்லா பிரேரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.


இதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர், அடுத்த பாராளுமன்ற வாரத்தில் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான யோசனையை முன்வைப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


  செவ்வாய்க்கிழமை (06)  பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியதைத் தொடர்ந்து, சபாநாயகர் அறிவித்தலின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்துக் கூறும்போதே, அஜித் பி. பெரேரா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.


அஜித் பி. பெரேரா அங்கு மேலும் தெரிவிக்கையில்,


“என்னால் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி சிறப்புரிமைப் பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டது. இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் உங்களுக்கு எதிராக (சபாநாயகருக்கு எதிராக) குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றச் சிறப்புரிமைச் சட்டத்தில் சபாநாயகர் எம்.பியாகவே கருதப்படுகின்றார். 


அவருக்கென விசேட விடுப்புரிமை கிடையாது. ஜனாதிபதிக்கு மட்டுமே அவ்வாறான விடுப்புரிமை உள்ளது. எவ்வாறாயினும், உங்களுடைய அறிவித்தலுக்கமையவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாங்கள் உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம். அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மேலும் சில விடயங்களையும் உள்ளடக்கி அதனைக் கொண்டுவருவோம்” என்றார்.


இதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறுகையில்,

“நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர் வரும் முதலாவது பாராளுமன்ற வாரத்திலேயே அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து யோசனையை முன்வைக்கின்றோம்” என்றார்.



Read More

Previous Post

காலநிலை மாற்றச் சட்டத்தின் அவசியத்தை அரசு தீவிரமாகக் கருத வேண்டும் – Malaysiakini

Next Post

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம்; ராகுல் காந்தி கைது | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம்; ராகுல் காந்தி கைது | India News (இந்தியா செய்திகள்)

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம்; ராகுல் காந்தி கைது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin