• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? | delhi capitals to play with srh today in ipl 2025 match preview

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? | delhi capitals to play with srh today in ipl 2025 match preview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேபிடல்ஸ் – சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு சீசனை வெற்​றிகர​மாக தொடங்​கியது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான முதல் ஆட்​டத்​தில் 286 ரன்​கள் வேட்​டை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 44 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. ஆனால் அடுத்த ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. இந்த ஆட்​டத்​தி​லும் ஹைத​ரா​பாத் அணி 190 ரன்​கள் குவித்​திருந்​தது.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. 209 ரன்​கள் இலக்கை துரத்​திய அந்த ஆட்​டத்​தில் அஷுதோஷ் சர்மா 31 பந்​துகளில், 66 ரன்​கள் விளாசி வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தார். அந்த ஆட்​டத்​தில் விப்​ராஜ் நிகா​மும் 15 பந்​துகளில் 39 ரன்​கள் விளாசி வெற்​றிக்​கான பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

இன்​றைய ஆட்​டத்​தில் கே.எல்​.​ராகுல் டெல்லி அணி​யில் களமிறங்​கு​கிறார். அவர், முதல் ஆட்​டத்​தில் தனது குழந்தை பிறப்​பையொட்டி களமிறங்​க​வில்​லை. தற்​போது அவர், திரும்​பி​யிருப்​ப​தன் மூலம் அணி​யின் பலம் அதி​கரிக்​கக்​கூடும். சாம்​பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்​பாக செயல்​பட்​டிருந்த கே.எல்​.​ராகுலை, இந்த சீசனுக்​காக டெல்லி கேபிடல்ஸ் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்​திருந்​தது. எனினும் அவர், கேப்​டன் பொறுப்பை ஏற்க மறுத்​திருந்​தார்.

இது ஒரு​புறம் இருக்க இந்​திய டி20 அணி​யில் கே.எல்​.​ராகுலுக்கு இடம் இல்​லாமல் உள்​ளது. தற்​போது ஐபிஎல் தொடரில் அவர், கேப்​ட​னாக இல்​லாத​தால் எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாமல் சுதந்​திர​மாக செயல்​படக்​கூடும். இந்த தொடரில் கவனத்தை ஈர்க்​கும் வகையி​லான திறனை வெளிப்​படுத்தி இந்​திய அணிக்​குள் மீண்​டும் நுழைவ​தில் கே.எல்​.​ராகுல் கவனம் செலுத்​தக்​கூடும். அவரது வரு​கை​யால் டெல்லி அணி​யின் டாப் ஆர்​டர் பேட்​டிங் வலுப்​பெறக்​கூடும்.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன், நித்​திஷ் ரெட்​டி, ஹென்​ரிச் கிளாசன் ஆகியோரை உள்​ளடக்​கிய பேட்​டிங் வரிசை டெல்லி அணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி தரக்​கூடும். போட்டி பிற்​பகலில் நடை​பெறும் அதிக அளவி​லான ரன் வேட்டை நிகழ்த்​தக்​கூடும். இது ரசிகர்​களுக்கு விருந்து படைப்​ப​தாக இருக்​கக்​கூடும்​.



Read More

Previous Post

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

Next Post

மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய் | Delhi government earns Rs 5000 crore from liquor

Next Post
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய் | Delhi government earns Rs 5000 crore from liquor

மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய் | Delhi government earns Rs 5000 crore from liquor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin