• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சண்டை நிறுத்தம்; அமெரிக்கா தலையீடு இல்லை – வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
சண்டை நிறுத்தம்; அமெரிக்கா தலையீடு இல்லை – வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 9:48 PM IST

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை என்று நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தத்திற்கு இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில் வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆபரேஷன் சிந்தூர் பற்றியும், எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் சண்டை குறித்தும் விவரித்தார்.

அப்போது, பாகிஸ்தான் உடனான தாக்குதலில் இந்தியாவின் விமானப்படை சார்ந்த எத்தனை விமானங்கள் சேதமடைந்தது என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை தர இயலாது என விக்ரம் மிஸ்ரி பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு எவ்வளவு இருந்தது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதனால் அறிவிப்பை வெளியிட்டார் என்றும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பாகிஸ்தான் பயன்படுத்திய சீனா மற்றும் துருக்கி நாட்டின் ராணுவ தளவாடங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்றும் அந்த நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்றும் உறுப்பினர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.

முதலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த கேள்விகளுக்கு விக்ரம் மிஸ்ரி பதிலளிக்க மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், இறுதியில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்று மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

பாகிஸ்தானில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்

Next Post

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Next Post
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin