• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோவை, மதுரை மக்களுக்கு பெரும் சோகம்.. மோடி காட்டிய Red Flag.. விஜயின் அடுத்த ஆக்ஷன் பிளான்? | Centre Rejects Metro for Coimbatore & Madurai Again – Suggests BRTS Instead; What Will Vijay Government Do Next?

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கோவை, மதுரை மக்களுக்கு பெரும் சோகம்.. மோடி காட்டிய Red Flag.. விஜயின் அடுத்த ஆக்ஷன் பிளான்? | Centre Rejects Metro for Coimbatore & Madurai Again – Suggests BRTS Instead; What Will Vijay Government Do Next?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை, மதுரை மக்களுக்கு பெரும் சோகம்.. மோடி காட்டிய Red Flag.. விஜயின் அடுத்த ஆக்ஷன் பிளான்?

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களாகவும், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளாகவும் இருந்து வரும் கோவை, மதுரை.. இந்நகர மக்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான திட்டம் என்றால் அது மெட்ரோ திட்டம் தான். ஸ்டாலின் தலைமையிலான முந்தைய அரசு தமிழ்நாட்டில் சமநிலையான வளர்ச்சி கொள்கை அடிப்படையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் முதலீட்டை ஈர்க்க வழிவகுத்தது.

இதன் நீட்சியாக மெட்ரோ திட்டங்களை கொண்டு வர திமுக அரசு முயற்சி செய்தது, இதில் முதல் கட்டமாக மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் திட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ரத்து செய்தது. இதன் பின்பு மீண்டும் புதிய தரவுகள் அடிப்படையில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மத்திய அரசு 2வது முறையாக ஒப்புதல் தர மறுத்துள்ளது.

கோவை, மதுரை மக்களுக்கு பெரும் சோகம்.. மோடி காட்டிய Red Flag.. விஜயின் அடுத்த ஆக்ஷன் பிளான்?

மே மாதம் திமுக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கோவை மற்றும் மதுரைக்கு ஏன் மெட்ரோ சேவை முக்கியம், தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு இரு நகரங்களும் பங்களிக்கிறது என பல தரப்பட்ட தரவுகளை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான காரணத்தை முன்வைத்து அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என அறிவித்து, இதற்கு பதிலாக BRTS எனப்படும் பஸ் ரேபிட் சிஸ்டத்தை அமைக்க அறிவுரை வழங்கியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சகம் 2011 சென்சஸ் அடிப்படையில் இரு நகரங்களிலும் மக்கள் தொகை எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது, ஆனால் இதுமட்டும் இத்திட்டத்தை செயல்படுத்தாத்திற்கு காரணமில்லை, இத்திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நேரம் என்பது பெரிய அளவில் குறையாது என தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக இவ்விரு நகரத்தில் தற்போது இருக்கும் பேருந்து போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. BRTS திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நேரத்தை குறைக்க முடியும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் ஆக்ரா, போபால், பாட்னா, ஜெய்பூர், இந்தோர் போன்ற நகரங்களில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெய்பூரில் மெட்ரோ திட்டத்தின் 2ஆம் கட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என தொழிற்துறையினர்.

இந்த 5 நகரங்களை காட்டிலும் கோயம்புத்தூர், மதுரை பெரிய நகரமாக விளங்குகிறது. இதேபோல் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை நகரமாக விளங்குகிறது. குறிப்பாக உற்பத்தி, சேவை துறை என இரண்டு பிரிவிலும் சிறந்து விளங்குகிறது.

மேலும் மதுரை தமிழ்நாட்டின் முக்கிய கோவில் நகரம் என்பதால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக வரும் நகரமாக உள்ளது. இதேவேளையில் மதுரையில் தற்போத சிப்காட், டெக் பார்க் என தொடர்ந்து முதலீட்டாளர்களையும், நிறுவனங்களையும் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் இவ்விரு நகரங்களுக்கும் மெட்ரோ சேவை கொண்டு வருவது மூலம் பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்பது தமிழ்நாடு அரசின் வாதமாக உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் வேளையில் விஜய் தலைமையிலான தவெக அரசு கோவை, மதுரையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளை தொடருமா..? எப்படி மத்திய அரசை இத்திட்டத்தில் கையாளப்போகிறது..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Share This Article

English summary

Centre Rejects Metro for Coimbatore & Madurai Again – Suggests BRTS Instead; What Will Vijay Government Do Next?

Centre Rejects Metro for Coimbatore & Madurai Again – Suggests BRTS Instead; What Will Vijay Government Do Next? — கோவை, மதுரை மக்களுக்கு பெரும் சோகம்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. விஜயின் அடுத்த ஆக்ஷன் பிளான் என்ன?

Story first published: Sunday, July 26, 2026, 10:12 [IST]

Other articles published on Jul 26, 2026

Read More

Previous Post

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்! | கிரிக்கெட் போட்டோகேலரி

Next Post

ரூ.6.7 கோடி செலவில் ‘ஜீன் எடிட்டிங்’ சிகிச்சை: 6 வயது சிறுமி பலி… சீனாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் | World News (உலக செய்திகள்)

Next Post
ரூ.6.7 கோடி செலவில் ‘ஜீன் எடிட்டிங்’ சிகிச்சை: 6 வயது சிறுமி பலி… சீனாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் | World News (உலக செய்திகள்)

ரூ.6.7 கோடி செலவில் 'ஜீன் எடிட்டிங்' சிகிச்சை: 6 வயது சிறுமி பலி... சீனாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin