மாணவர்கள் போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்யவும், விபத்து அபாயங்களைக் குறைக்கவும் நகரத்திலுள்ள 122 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை காவல்துறை நியமிக்கவுள்ளது. கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி பாடில் மார்சூஸ் கூறுகையில், இந்த அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க உதவுவதோடு, மாணவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களைத் தொடர்ந்து கண்காணித்துச் சோதனையிடுவார்கள் என்றார். மோட்டார் சைக்கிள் ஓட்டும் மாணவர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த அவர்களின் உரிமங்களையும் அவர்கள் சரிபார்ப்பார்கள். […]
Read More
