அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமியாவார்.
மேலதிக விசாரணை
வீதி ஒன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடம்பன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

