முன்னாள் ஊவா மாகாண ஆளுநரும், கொழும்பின் முன்னாள் மேயருமான முகமது முஸாமிலின் மகனான முகமது நிஷாம் ஜமால்தீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(02) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
47 வயதான ஜமால்தீன், லண்டன் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப் பயணத் தடை
கொழும்பு நிதி மற்றும் மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட ஒரு விசாரணை தொடர்பாக விதிக்கப்பட்ட விமானப் பயணத் தடையின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, அவர் கட்டுநாயக்க விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மாலை சுமார் 04.30 மணியளவில் கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

