2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரையொட்டி நடைபெறவுள்ள ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் அதிர்ச்சி தரும் வகையில் 5 அணிகளின் கேப்டன்களை நிர்வாகம் விடுவித்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளின் நிர்வாகம் இன்று வெளியிட்டது. இதன்படி,
சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவிந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, சிவம் துபே
மும்பை இந்தியன்ஸ் – ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, திலக் வர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி, ரஜத் பட்டிதார், யஷ் தயாள்
டெல்லி கேபிடல்ஸ் – அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, ரமன்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி,
குஜராத் டைட்டன்ஸ் – ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாரூக்கான்
பஞ்சாப் கிங்ஸ் – ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல், சிம்ரோன் ஹெட்மேயர்,
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹெய்ன்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட் ஆகிய வீரர்கள் அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிர்ச்சி தரும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிலும் குறிப்பாக ஐபிஎல் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.
&w=750&resize=750,375&ssl=1)
