Last Updated:
கேரளாவில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் முதலமைச்சர் தேர்வு செய்யப்படாத நிலையில், மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சித் தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் முதலமைச்சர் தேர்வு செய்யப்படாத நிலையில், மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சித் தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
கடந்த 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து யார் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சதீசனை முதலமைச்சராக்க வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கூட்டணி கட்சியான ஐயூஎம்எல்-ம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் கே.சி.வேணுகோபாலை முதலமைச்சராக்கிவிட்டு, சதீசனுக்கு முக்கிய அமைச்சரவையை வழங்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரமேஷ் சென்னிதலாவும் இருக்கும் நிலையில் அவருக்கு சபாநாயகர் பதவியைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் முதலமைச்சர் பதவியைத் தவிர வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என சதீசன் உறுதி காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்த கேரள காங்கிரஸின் முன்னாள் தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.


