Last Updated:
இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 45 உட்பட நாடு முழுவதும் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, நேற்று முன்தினம் தொடங்கி, வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, குழந்தையின் விவரங்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
Also Read: ஆதார், பள்ளி ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாமா?.. மத்திய அரசு விளக்கம்!
தேர்வான மாணவர்களின் முதல் பட்டியல் 25, 26 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் பட்டியல் அடுத்த மாதம் 2ஆம் தேதியும் மற்றும் மூன்றாம் பட்டியல் 7ஆம் தேதியும் வெளியாக உள்ளது.
March 10, 2025 2:31 PM IST


