• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி கோப்பைகளை அதிகமுறை வென்ற கேப்டன்கள்.. தோனி, ரோஹித் சர்மாவுக்கு எந்த இடம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐசிசி கோப்பைகளை அதிகமுறை வென்ற கேப்டன்கள்.. தோனி, ரோஹித் சர்மாவுக்கு எந்த இடம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 10, 2025 5:00 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிளைவ் லாய்டு 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் என்ற அடிப்படையில் 2 கோப்பைகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

தோனி - ரோஹித் சர்மாதோனி - ரோஹித் சர்மா
தோனி – ரோஹித் சர்மா

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது நிரூபித்து திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து பரவலாக பேசப்பட்டது. தற்போது இந்திய அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், இருவரும் தற்போதைக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்கள்.

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அந்த தொடர் முடியும் வரை இருவரும் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐசிசி கோப்பைகளை அதிகமுறை வென்ற கேப்டன்கள் யார்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த லிஸ்டில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. மேலும், சாம்பியன்ஸ் கோப்பையை 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியது. இதன்மூலம் மொத்தம் 4 ஐசிசி கோப்பைகளுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்.

எம்.எஸ். தோனி

3 ஐசிசி கோப்பைகளுடன் எம்.எஸ்.தோனி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரது தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு நடந்த  உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. இதேபோன்று, 2007ல் நடந்த டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 2013 இல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றையும் இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் மொத்தம் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனாக எம்.எஸ்.தோனி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிளைவ் லாய்டு 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் என்ற அடிப்படையில் 2 கோப்பைகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

அதே நாட்டைச் சேர்ந்த டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த டி20 உலக கோப்பையை வென்றது. 2 கோப்பைகளுடன் டேரன் சாமி நான்காம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க – Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் கோப்பை வென்றதன் மூலம் எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி – ரோகித் சர்மா..!

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2023 இல் நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 2 ஐசிசி கோப்பை வென்ற கேப்டன் என்ற அடிப்படையில் பேட் கம்மின்ஸ் 5-ஆம் இடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணி 2024 இல் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் நடப்பு ஆண்டில் நடந்துள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற அடிப்படையில், மற்ற தொடருடன் உடன் ஒப்பிடும்போது, ஐசிசி கோப்பைகளை அதிகமுறை வென்ற கேப்டன் என்ற பட்டியலில் ரோஹித் சர்மா 6-ஆம் இடத்தில் உள்ளார்.

First Published :

March 10, 2025 5:00 PM IST

Read More

Previous Post

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

Next Post

BM-ஐ வலுப்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய தாய்மொழிப் பள்ளிகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் – Malaysiakini

Next Post
BM-ஐ வலுப்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய தாய்மொழிப் பள்ளிகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் – Malaysiakini

BM-ஐ வலுப்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய தாய்மொழிப் பள்ளிகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin