பெரிதாக
அறியப்படாத ‘பார்ட்டி கெலுவர்கா மலேசியா’ கட்சியைத் தான் பொறுப்பேற்பது குறித்த
பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும்,
இந்த மாற்றம் எப்போது நடக்கும் என்பது குறித்து அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
“கட்சியை எப்படிப் பொறுப்பேற்பது” என்பது குறித்த விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும், இது ஒரு சிக்கலான
விஷயம் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன,
அதனால்தான் நாங்கள் இன்னும் ஆலோசித்து வருகிறோம். கட்சியின் அரசியலமைப்புச் சட்டம் போன்ற சில தொழில்நுட்ப ரீதியான
நடைமுறைகள் இருப்பதால் இது குறித்து இன்னும்
விவாதிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார்.
பார்ட்டி
கெலுவர்கா மலேசியா கட்சியின் நிறுவனரான கைரி ஜெயா, ஹம்சா
சைனுதீன் அக்கட்சியை
வழிநடத்துவதற்கான பாதை தயாராகி வருவதாகவும்,
பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவரான அவர் அக்கட்சியைப் பொறுப்பேற்பது “90%
உறுதி” என்றும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஹம்சா
மற்றும் அவரது ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக இணைந்த பிறகு, அவர் கட்சியின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்காக உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று கைரி ஜெயா கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்சத்து கட்சித் தலைவர் முகிதின் யாசினுக்கும், ஹம்சா சைனுடினுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தலைமைத்துவப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஹம்சா பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் முதல், ஹம்சா சைனுதீனின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
-fmt
