இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, உத்தியோகபூர்வ பயணமாக செவ்வாய்க்கிழமை (03) அன்று காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.
மன்னாரிற்கு வருகை தந்த பிரதம நீதியரசர், மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.
நீதிமன்றத்திற்கு வருகை தந்த பிரதம நீதியரசரை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா, மன்னார் நீதிமன்றச் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள். இணைந்து வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, மன்னார் மேல் நீதிமன்றக் கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தின் நீதிமன்றச் செயற்பாடுகள், வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் நிர்வாக ரீதியான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ரொசேரியன் லெம்பட்


