• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கூல்டிரிங்ஸ் நிறுவனம்.. இப்போ மதுபானம் தயாரிப்பில் இறங்குகிறது.. கில்லாடியான வருண் பெவரேஜ்ஸ்! | Pepsi Bottler Varun Beverages Enters Alcoholic Beverage Market with ₹10 Crore KIVA Spirits Subsidiary

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கூல்டிரிங்ஸ் நிறுவனம்.. இப்போ மதுபானம் தயாரிப்பில் இறங்குகிறது.. கில்லாடியான வருண் பெவரேஜ்ஸ்! | Pepsi Bottler Varun Beverages Enters Alcoholic Beverage Market with ₹10 Crore KIVA Spirits Subsidiary
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூல்டிரிங்ஸ் நிறுவனம்.. இப்போ மதுபானம் தயாரிப்பில் இறங்குகிறது.. கில்லாடியான வருண் பெவரேஜ்ஸ்!

இந்திய மதுபான சந்தை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, முந்தைய தலைமுறைப்போல் தற்போதைய இளம் தலைமுறையினர் மதுபானத்தை அதிகளவில் குடிப்பது இல்லை. இதற்கு மாறாக ப்ரீமியம் ரக மதுபானங்கள், Sober பாணங்களை அதிகளவில் தேர்வு செய்ய துவங்கியுள்ளனர் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது நாள் வரையில் பேபி பூம்பர்ஸ் முதல் மில்லினியல்ஸ் வரையிலான தலைமுறையினர் மதுபானத்தை அதிகமாக விரும்பி அதிகளவில் நுகர்ந்து வந்தனர். ஆனால் ஜென் Z தலைமுறையினர், மது அருந்தும் முறையை முற்றிலுமாக மாற்றி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் பல முன்னணி மதுபான நிறுவனங்கள் இந்த இளம் தலைமுறையை கவர்வதற்காக தனி ஆய்வை துவங்கியுள்ளனர்.

கூல்டிரிங்ஸ் நிறுவனம்.. இப்போ மதுபானம் தயாரிப்பில் இறங்குகிறது.. கில்லாடியான வருண் பெவரேஜ்ஸ்!

இந்த இடைவெளியை தனக்கான வர்த்தக வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பெப்சி நிறுவனத்தின் மிகப்பெரிய பாட்டிலிங் நிறுவனமான வருண் பெவரேஜ்ஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக தனி நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்துள்ள வருண் பெவரேஜ்ஸ் நிறுவனம் டியாஜியோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பிரதமேஷ் மிஷ்ரா புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியாவில் வருண் பெவரேஜ்ஸ் முதல்கட்டமாக ரெடி டு டிரிங் பிரிவு மற்றும் அதற்கு தொடர்புடைய பிரிவுகளில் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டு உள்ளதாக வருண் பெவரேஜ்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமாந ஆர்ஜே கார்ப் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.

இப்பிரிவு வர்த்தகத்திற்காக KIVA Spirits என்ற நிறுவனத்தை உருவாக்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் வருண் பெவரேஜ்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும் எனவும் இந்த நிறுவனத்தை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

ரெடி டு டிரிங் என்பது சோடா, தண்ணீர் அல்லது ஜூஸ் போன்றவற்றை முன்பே கலந்து குடிக்க தயாராக இருக்கும் மதுபானமாகும். இதை இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் விருப்பமானதாகவும், பப், 5 ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்கும் காக்டெயில் போலே இது ரெடியாக கிடைக்க கூடியது என்பதால் உலகில் பல நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வருண் பெவரேஜ்ஸ் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் தனிப்பட்ட பாட்டிலிங் பார்ட்னராக உள்ளது, சமீபத்தில் தான் இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தத்தில் மற்ற பானங்களின் தயாரிப்பு மற்றும் பாட்டலிங் பணிகளை மேற்கொள்ள தளர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து Ready To Drink மதுபான விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் வருண் பெவரேஜ்ஸ் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் பீர் வகைகளை ஆப்பிரிக்காவில் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை பெற்றது குறிப்பித்தக்கது. இப்படி படிப்படியாக வருண் பெவரேஜ்ஸ் மதுபான துறையில் தனது அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது.

Share This Article

English summary

Pepsi Bottler Varun Beverages Enters Alcoholic Beverage Market with ₹10 Crore KIVA Spirits Subsidiary

Pepsi Bottler Varun Beverages Enters Alcoholic Beverage Market with ₹10 Crore KIVA Spirits Subsidiary — கூல்டிரிங்ஸ் நிறுவனம்.. இப்போ மதுபானம் தயாரிப்பில் இறங்குகிறது.. கில்லாடியான வருண் பெவரேஜ்ஸ்!

Story first published: Wednesday, August 26, 2026, 16:08 [IST]

Other articles published on Aug 26, 2026

Read More

Previous Post

Bullet Train : வேகமெடுக்கும் புல்லட் ரயில் பணிகள்.. 3 மலைச் சுரங்கங்கள் மற்றும் பிரம்மாண்ட பாலங்கள் தயார்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நேபாளம் வெள்ளப்பெருக்கு: பீகாரை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை | Makkal Osai

Next Post
நேபாளம் வெள்ளப்பெருக்கு: பீகாரை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை | Makkal Osai

நேபாளம் வெள்ளப்பெருக்கு: பீகாரை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin