• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸின் தொடர் வெற்றிகளுக்கு தடை போடுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி? | today GT vs RR match in ipl 2025 explained

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
குஜராத் டைட்டன்ஸின் தொடர் வெற்றிகளுக்கு தடை போடுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி? | today GT vs RR match in ipl 2025 explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று 7-வது இடத்​தில் உள்​ளது. குஜ​ராத் அணி சீசனை தோல்​வி​யுடன் தொடங்​கி​யிருந்​தது.

அந்த அணி தனது தொடக்க ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி​யிடம் 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றிருந்​தது. ஆனால் அதன் பின்​னர் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டது. மும்பை இந்​தி​யன்​ஸ், ஆர்​சிபி, சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஆகிய அணி​களை வீழ்த்தி ஹாட்​ரிக் வெற்​றியை பதிவு செய்​துள்ள குஜ​ராத் அணி சொந்த மண்​ணில் மீண்​டும் ஒரு வெற்​றியை பெறும் முனைப்​புடன் களமிறங்​கு​கிறது.

பேட்​டிங்​கில் ஷுப்​மன் கில் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும். ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஷுப்​மன் கில் 43 பந்​துகளில் 61 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதே​போன்று வாஷிங்​டன் சுந்​தர் 29 பந்​துகளில் 49 ரன்​களும், ஷெர்​பேன் ரூதர்​போர்டு 16 பந்​துகளில் 35 ரன்​களும் விளாசி​யிருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் கடந்த ஆட்​டத்​தில் விரை​வாக ஆட்​ட​மிழந்த சாய் சுதர்​சன், ஜாஸ் பட்​லர் மீண்​டும் மட்​டையை சுழற்​று​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

பந்து வீச்​சில் கடந்த இரு ஆட்​டங்​களாக முகமது சிராஜ் அசத்தி வரு​கிறார். ஆர்​சிபிக்கு எதி​ராக 19 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை கைப்​பற்​றிய அவர், ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ராக 17 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவர், தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும். இதே​போன்று சுழற்​பந்து வீச்​சில் சாய் கிஷோர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். நடப்பு சீசனில் 4 ஆட்​டங்​களில் 8 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்து பந்​து​வீச்சு வெளிப்​படக்​கூடும்.

அதேவேளை​யில் ரஷித் கான், இஷாந்த் சர்மா ஆகியோரது பந்​து​வீச்சு கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது. ரஷித் கான் 4 ஆட்​டங்​களில் ஒரு விக்​கெட் மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார். அதேவேளை​யில் ஓவருக்கு 10 ரன்​களுக்கு மேல் வாரி வழங்​கி​யுள்​ளார். இஷாந்த் சர்மா ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 4 ஓவர்​களை வீசி விக்​கெட் ஏதும் கைப்​பற்​றாமல் 53 ரன்​களை தாரை வார்த்​திருந்​தார். நடப்பு சீசனில் அவர், 8 ஓவர்​களை வீசி 107 ரன்​களை வழங்கி ஒரு விக்​கெட் மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார். அநேக​மாக இன்​றைய ஆட்​டத்​தில் இஷாந்த் சர்மா நீக்​கப்​படக்​கூடும்.

ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணியை வீழ்த்​திய உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. இந்த ஆட்​டத்​தில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 67 ரன்​கள் விளாசி​யிருந்​தார். அவர், பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரிக்​கச் செய்​யக்​கூடும். சஞ்சு சாம்​சன், துருவ் ஜூரெல், ரியான் பராக், நித்​திஷ் ராணா ஆகியோ​ரும் மட்​டையை சுழற்​றக்​கூடிய​வர்​கள். பந்து வீச்​சில் ஜோப்ரா ஆர்ச்​சர் பார்​முக்கு திரும்பி உள்​ளார்.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 25 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை கைப்​பற்​றிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். அவரை தவிர்த்து சந்​தீப் சர்மா மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக உள்​ளார். இன்​றைய போட்டி நடை​பெறும் அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானத்​தில் கடந்த 4 ஆட்​டங்​களில் முறையே 243, 232, 196 மற்​றும் 160 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. இதனால்​ ரசிகர்​கள்​ ரன்​ மழை​யில்​ நனையக்​கூடும்.



Read More

Previous Post

தில்லி, மும்பை சிறைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Next Post
வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin