திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிருஷ்ணகுமார் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதாக உளவுத்துறை இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கிய நிலையிலேயே அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அவரைக் கைது செய்திருப்பதாக தமிழ் நாட்டில் இருக்கின்ற தீபன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அவர் இலங்கையில் கைது செய்யப்படுவார் என தெரிந்திருந்தும் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியது கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் இருக்கின்ற முகாம்கள் அல்லது வேறு நாடுகளுக்கு அவரை அனுப்பி வைத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சாதாரண முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்புபவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் முகம்கொடுக்க தேவையில்லை எனவும் இந்தியாவிற்கு வந்த பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் இலங்கைக்கு திரும்பும் போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

