International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா மோதல் எப்போது முடியும்.. E20 பெட்ரோல் கொடுமையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இந்தியா உட்பட, மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா குறித்து ஈரான் காட்டமாக பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என சர்வதேச அரசியல்வாதிகளை பேச வைத்திருக்கிறது.
எங்க நாட்டின் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்கா தொடங்கினால்.. அதற்கு மிக கடுமையான பதிலடியை நாங்கள் கொடுப்போம். அமெரிக்க ராணுவத்தினர் யாராவது எங்கள் மண்ணில் கால் வைத்தால்.. காலை வெட்டுவோம் என ஈரான் ராணுவ தரைப்படை தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி பேசியிருக்கிறார்.

எங்களின் தரைப்படை போருக்கு முழுமையாக ரெடியாக இருக்கிறது. நாங்கள் எங்களின் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எதிரிகள் ஊடுருவினால்.. அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் ஜெனரல் கூறியிருக்கிறார். இப்படியாக ராணுவ எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும்.. மறுபுறம் அமெரிக்காவுடனான தூதரக உறவுகள் மறைமுகமாகவே நீடிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருக்கிறார்.
“நாங்க இப்போதைக்கு அமெரிக்கா கூட நேரா பேசல.. நடுவுல சில ஆட்களை வச்சு பேசுறோம். இதுக்கு முன்னாடி ஒப்பந்தம் போட்டு.. அதை அமெரிக்காவே மீறிடுச்சி! இதைப்பத்தி அந்நாட்டு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வரும் வரை.. நேரா நாங்க பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்” என்று அராக்சி கூறியிருக்கிறார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவே, ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை ரெகுலர் செய்வது பற்றி.. ஓமனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கி வருவதாக ஈரான் கூறியிருக்கிறது.
எது எப்படியோ! ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பழையபடி திரும்ப வேண்டும். ஏனெனில் அந்த வழியாகத்தான் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை நடக்கிறது. ஈரான்-அமெரிக்கா பஞ்சாயத்து காரணமாக, இந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும்.. இந்தியாவில் பழையபடி தூய்மையான பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நேரத்தில், அமெரிக்க ராணுவத்தினரின் காலை வெட்டுவேன் என்று ஈரான் பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என்று சொல்லத் தோன்றுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.




