விளையாட்டுப் போட்டிகளில் சாதாரணமான விளையாட்டு வீரர்களை போல், மாற்றுத்திறனாளிகளும் தற்போது அவர்களுக்கு நிகராக போட்டி போட்டுக் கொண்டு ஒலிம்பிக் உள்ளிட்ட தேசிய விளையாட்டுகளில் விளையாடி பதக்கங்களையும் வாரி குவித்து வருகின்றனர்.தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெறும் போது நமது நாட்டின் மதிப்பும் உயர்கிறது. அந்த அளவுக்கு நாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனைகளை விளையாட்டுகளில் பதித்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மன வளர்ச்சி குன்றி இருந்தாலும் அல்லது மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் கண்டு மனம் தளராமல் விளையாட்டுத்துறையில் படிப்படியாக முன்னேறி, உலக நாடுகளுக்கு மத்தியில் இன்று இந்தியா விளையாட்டு துறையில் திகழ்ந்து விளங்குகிறது. அப்படிப்பட்ட சாதனையாளர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளியில் கொண்டுவர நம்மைப் போன்ற உள்ளவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.
அதன்படி தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற பொது மற்றும் சிறப்பு பிரிவினருக்கான பவர் லிப்டிங் (வளு துாக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் புதுச்சேரி மாற்றுத்திறனாளி வீரர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறப்பு ஒலிம்பிக், ஆசிய பவர் லிப்டிங் போட்டி என தான் பங்கேற்ற அனைத்து சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பல்வேறு பதகங்களை குவித்து, சாதிக்க உடல்குறை ஒரு தடையல்ல, உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை தனது 7 வருட கடின உழைப்பால் நிரூபித்துக்காட்டியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர் விஷால்.
இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இதையும் வாசிக்க : குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் “பூஸ்ட் குக்கீஸ்” : எப்படி தயாராகிறது தெரியுமா ?
புதுச்சேரி மதகடிப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தீயணைப்பு துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுந்தரி, வளவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு விஷால் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் . இவர்களில் விஷால் மூளை வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தை ஆவார். விஷால் சிறுவயது முதல் மற்றவர்கள் போல் நாமும் இருக்க வேண்டும் அதைவிட பல மடங்கு சாதிக்க வேண்டும் எண்ணம் கொண்டவர். கடந்த 2017 ஆம் ஆண்டு புதுச்சேரி நைனார்மண்டபத்தில் உள்ள டே பிரேக்கர் (DAY BREAKER) என்ற உடற்பயிற்சி கூடத்திற்கு பயிற்சிக்கு அனுப்பினர்.
விஷாலால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்துகொள்ள முடியாது நிலையிலும், கடந்த 7 வருடமாக தினமும் 25 கி.மீ தனது சொந்த ஊரான மதகடிக்கப்பட்டில் இருந்து பேருந்தில் ஏறி தனியாக நயினார்மண்டபத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி பெற்று தற்போது வளுதூக்கும் போட்டிகளில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதகங்களை குவித்து வருகிறார்.2019 ஆண்டு முதலே மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை பெற்ற விஷால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று, நான்கு வெள்ளிகளை குவிக்க, உலகமே விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தது.
பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, மனதின் குரல் நிகழ்ச்சியிலும் விஷாலின் திறமையை வியந்து பாராட்டினார். தனது அடுத்தடுத்த வெற்றிகளால் இரும்பு மனிதன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ள விஷால், மலேசியாவில் நடந்த ஆசியா பவர் லிப்டிங் போட்டியில் நான்கு தங்க பதக்கங்களையும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை சிறப்பு மாணவர்களுக்கான தேசிய பவர் லிப்டிங் போட்டியில் 59 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் காமன்வெல்த் பொது மற்றும் சிறப்பு பிரிவினருக்கான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாட புதுச்சேரி வீரர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நடுவராக அவரது பயிற்சியாளர் பாக்கிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல, உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ள விஷால், நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க நாமும் வாழ்த்துவோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)