• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

களுத்துறையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ‘ராஜவத்த சஞ்சு’ காயம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
களுத்துறையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ‘ராஜவத்த சஞ்சு’ காயம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
களுத்துறையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ‘ராஜவத்த சஞ்சு’ காயம்!

களுத்துறை நாகொட பகுதியில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ‘ராஜவத்த சஞ்சு’ காயம். வாகனத்தில் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகத் தகவல்.


களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதன் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, களுத்துறை பொம்புவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்துமாறு அதன் சாரதிக்கு உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவுக்கு இணங்காமல் சாரதி தொடர்ந்து முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டியைப் பொலிஸார் பின்தொடர்ந்துள்ளனர். சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் வரை இடம்பெற்ற இந்தப் பின்தொடர்தலின் பின்னர், நாகொட பகுதியில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியின் சாரதி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் களுத்துறை, ராஜவத்த பகுதியைச் சேர்ந்தவரும் ‘ராஜவத்த சஞ்சு’ என்ற பெயரில் அறியப்படுபவருமாவார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியைப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மீட்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருட்களின் வகை மற்றும் அளவு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோன்று, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாரதியின் தற்போதைய உடல்நிலை குறித்த மேலதிக விபரங்களும் வெளியாகவில்லை.

Read More

Previous Post

15 வருஷமா பரணில் கிடந்த பழைய கார்டுகள்.. ரூ.20 கோடி ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Pokemon Cards Auction.. England Father’s 15-Year-Old rare Collection Fetches Rs 20 Crore

Next Post

DECODE | வங்கிகளையே ஏமாற்றி பணப்பரிவர்த்தனை செய்த AI… ஒரே க்ளிக்கில் காணாமல் போகும் கோடிகள்!

Next Post
DECODE | வங்கிகளையே ஏமாற்றி பணப்பரிவர்த்தனை செய்த AI… ஒரே க்ளிக்கில் காணாமல் போகும் கோடிகள்!

DECODE | வங்கிகளையே ஏமாற்றி பணப்பரிவர்த்தனை செய்த AI... ஒரே க்ளிக்கில் காணாமல் போகும் கோடிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin