கல்யாண் ஜுவல்லர்ஸ் தடாலடி.. மோடி சொன்னதையும் தாண்டி நடந்த சர்ப்ரைஸ்..! 3 நாட்களில் 36% உயர்வு..!
இந்தியாவின் முன்னணி தங்க நகைகளில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் மே மாதம் முதல் பெரும் சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது தடாலடியாக உயர்ந்துள்ளது. அதாவது, பிரதமர் மோடி ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த அடுத்த ஒரு வருடத்திற்கு மக்களை தங்கத்தை வாங்க வேண்டாம் என அறிவித்ததோடு, தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது. இது கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து நகை கடைகளையும் பெரிய அளவில் பாதித்தது.
அதுவும், இக்காலக்கட்டம் திருமண சீசன் என்பதால் மக்கள் அதிகம் தங்கம் நகை வாங்கும் நேரத்தில் மோடி வெளியிட்ட அறிவிப்பு தங்க நகை கடைகளின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் காலாண்டு முடிவுகளில் கல்யாண் ஜுவல்லர்ஸ் சுமார் 38 சதவீத அதிக வருவாய் ஈட்டியுள்ளது முதலீட்டு சந்தைக்கு பெரும் சர்ப்ரைஸ் ஆக உள்ளது.

அதாவது மோடியின் அறிவிப்பை தாண்டி மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது கல்யாண் ஜுவல்லர்ஸ். இதன் எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தாறுமாறக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிரச்சி கொடுத்துள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு விலை அதிகப்படியாக 8.67 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 483.10 ரூபாய் அளவீட்டை தொட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் 36 சதவீதமும், ஜூலை மாதம் மொத்தமாக 41 சதவீதமும் வளர்ச்சி அடைந்து லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது.
ஜூலை 10ஆம் தேதி வர்த்தகத்தில் மட்டும் சுமார் 10 கோடி பங்குகள் கைமாறியுள்ளது, பொதுவாக கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் வார அடிப்படையில் சாரசரியாக 4 கோடி பங்குகள் வர்த்தகமாகும், மாத அடிப்படையில் 2 கோடி பங்குகள் வர்த்தகமாகும், ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 10 கோடி பங்குகள் வர்த்தகமாகியுள்ளது.
2 மாதமாக சரிவில் இருந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் இந்த மாபெரும் உயர்வை பதிவு செய்ய அடிப்படை காரணமாக இருந்தது அதன் காலாண்டு முடிவுகள் தான், 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 38 சதவீத அதிக வருவாய் ஈட்டியுள்ளது, இதேபோல் இந்நிறுவனத்தின் மத்திய கிழக்கு சந்தையில் 30 சதவீத அதிக வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இக்காலாண்டு முடிவில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஏப்ரல் மாதம் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கின் சந்தை முடங்கிய வேளையில் கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்த நிலையிலும் மத்திய கிழக்கில் same-store-sales வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது தான். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 14 சதவீதம் வெளிநாட்டு வர்த்தகத்தை சார்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் மட்டும் 12 கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைகளையும், 5 Candere ஷோரூம்-களையும் இந்தியாவில் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கிளை எண்ணிக்கை 524 ஷோரும்-களாக அதிகரித்துள்ளது. உலகளவில் பார்க்கும் போது மத்திய கிழக்கில் 38 கிளைகளும், அமெரிக்காவில் இரண்டும், பிரிட்டனில் 1ம் உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 129 Candere கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக பிரிவான Candere தளத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 112 சதவீதம் அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது சந்தை முதலீட்டாளர்கள் வியக்கம் விஷயம் என்னவென்றால் மோடியின் அறிவிப்பை தாண்டி, இறக்குமதி வரி உயர்வை தாண்டி, தங்கம் விலை சரிவை பயன்படுத்த வேண்டும் என் ஒற்றை காரணத்திற்காக மக்கள் தொடர்ந்து தங்க நகைகளை வாங்கி வருவது கல்யாண் ஜுவல்லர்ஸ் காலாண்டு முடிவுகள் உறுதி செய்துள்ளது.
இதோடு தற்போது மக்கள், தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதில் நகை கடைகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
சந்தை நிபுணர்கள் கல்யாண் ஜுவல்லர்ஸ் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை முதலீட்டாளர்கள் மிகவும் முக்கியமாக பார்க்கிறது, உதாரணமாக சிட்டி கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு விலை தற்போதைய நிலையில் இரட்டிபாகி 750 ரூபாய் வரையில் உயரும் என தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய பிரான்சைசி அடிப்படையிலான வர்த்தக விரிவாக்கம் தான், இது பெரிய அளவில் வருவாமானத்தை ஈட்டி தரும் என நம்புகிறது சிட்டி.
இதேபோல் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கூறுகையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் BUY ரேட்டிங் கொடுத்து டார்கெட் விலையாக 670 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலம் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தற்போதை நிலையில் இருந்து 80 சதவீதம் வரையில் உயரும் என்பதை காட்டுகிறது.

