• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்….

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: தீபச்செல்வன்

ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத இரத்தக் கறையாகப் பதிந்த நாள். அன்றைய தினங்களில் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் நனைந்தது.

தமிழர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அவர்களின் வீடுகள், உடைமைகள், தொழில்கள், கல்வி, வாழ்வாதாரம் என ஒரு இனத்தின் இருப்பையே குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்கள்மீதான இனவெறுப்பை அரசியல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசிய அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், அரச இயந்திரமும் அமைச்சர்களும் இணைந்து, இலங்கைத் தலைநகரை மையமாகக் கொண்டு வாழ்ந்திருந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார வலிமை, சமூக அடித்தளம், இனத்தின் தொடர்ச்சி ஆகியவற்றை சிதைத்தழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த இனவெறி வன்முறை கொழும்பைத் தாண்டி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாக, அரசின் காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள்கூட பாதுகாக்கப்படாமல், அவர்கள்மீதும் திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

மகத்தான போராளிகள்

ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அகலாத வடுவாக அமைந்த கறுப்பு ஜூலைப் படுகொலைகள் ஜூலை 23இல் துவங்கப்பட்ட நிலையில் ஜூலை 25ஆம் நாளில் அதன் தொடர்ச்சியாக தமிழ அரசியல் கைதிகள் மீதான படுகொலை இடம்பெற்றது.

அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களுக்காக சிங்கள அரசியல் கைதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... | Kuttimani Thangadurai Were Murdered In Black July

இந்த நிலையில் எவ்வாறு விடுதலைப் புலிகளின் திருநெல்வேலித் தாக்குதலை தகுந்த வாய்ப்பாக சொல்லிக் கொண்டு கறுப்பு ஜூலைப் படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தியதோ அதுதேபோன்று கறுப்பு ஜூலையை தகுந்த வாய்ப்பாக்க் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள்மீதான படுகொலையும் நடந்தது.


அரசினால் – அரச அமைச்சர்களின் கட்டளையில் சிறைக்கு வெளியில் இருந்த காடையர்களாலும் சிறைக்கு உள்ளே இருந்த காடையர்களாலும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை துவங்கியிருந்தது.

அவர்களை படுகொலை செய்யும் நோக்கில் துவங்கிய அந்த துன்புறுத்தலின் இறுதியில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழீழ விடுதலை வரலாற்றில் மகத்தான போராளிகளாக மதிக்கப்படுகின்ற குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட ஈழவிடுதலைப் போராளிகளே இவ்வாறு வெலிக்கடைச் சிறையில் சிங்களப் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களின் படுகொலையின் பின்னால் என்ன காரணம் இருந்தது என்பது இன்றும் ஈழ மண்ணை அதிரச் செய்யும் பின்னணியைக் கொண்டது.


எனது கண்கள் தமிழீழத்தைக் காணட்டும்

தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோவின் முக்கியஸ்தர்களாக குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்டோர் அக்காலத்தில் இருந்தனர். குட்டிமணியும் தங்கதுரையும் பலாலி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு காலத்தில் அச் சிறையில் இருந்து அவர்கள் தப்பித்தனர்.

தவறுதலாக தங்கதுரைக்கு காலில் காயம் ஏற்பட அவரைத் தூக்கிக் கொண்டு 10 கிலோமீற்றர் வரை ஓடிச் சென்று அவர்கள் இருவரும் தப்பிக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைக்காக துடிப்புக் கொண்ட இளைஞர்களாக இவர்கள் இருந்தனர் என்பதை அக்காலத்தவர்கள் இச் சம்பவத்தைக் கூறி நினைவு கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... | Kuttimani Thangadurai Were Murdered In Black July


இந்த நிலையில் 1981 மே மாத நாட்களில் இன விடுதலை சார்ந்த செயற்பாடுகளுக்காக குட்டிமணிக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட வேளையில், உங்கள் இறுதி ஆசை என்ன என்று நீதிபதி நீதிமன்றத்தில் வினவியிருந்தார்.

அதற்கு அவர் அளித்த பதில் கண்டு அன்றைய நீதிமன்றமே அதிர்ந்து வியந்ததாம். “நான் தூக்கில் இறந்த பின்பு தனது இரண்டு கண்களையும் கண்பார்வை இல்லாத ஒரு தமிழருக்கு தானாமாக வழங்கவேண்டும். என்னால் பார்க்க முடியாமல் போகும் ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும்” என்றார் மாவீர்ர் குட்டிமணி.

ஈழத் தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்பதையும் எந்த நிலை வந்தாலும் அந்த தாகத்தை விட்டுக்கொடுக்க மகத்தான போராளிகள் தயார் இல்லை என்பதையும் மிகச் சிறந்த தலைவராக அளப்பெரிய போராளியாக மாவீரன் குட்டிமணி அன்று சிங்கள நீதிமன்றில் எடுத்துரைத்தார்.

சிறிங்கா நீதித்துறையை நிராகரித்த தங்கதுரை

அதேபோல சிறிலங்கா நீதிமன்றம் குட்டிமணி, தங்கதுரை, ஜெகனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தபோது மாவீரன் தங்கதுரை அவர்கள் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயத்தை பதிவாக்கியுள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் சிங்கள தேசத்துடன் இணைந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி அவர்கள்மீது பிரிவினைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என்பதை வலியுறுத்தி தங்கதுரை இறுதி உரை ஆற்றினார்.

அதன் அடிப்படையில் சிறிலங்கா நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவை அடிப்படையில் ஈழத் தமிழ் இனத்தை அழிக்கும் அமைப்பிலும் நோக்கிலும் உருவாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துரைத்து அதற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருந்தனர்.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... | Kuttimani Thangadurai Were Murdered In Black July


கறுப்பு ஜூலையின் இனப்டுகொலைத் தீ வெலிக்கடை சிறைச்சாலை கதவுகளையும் திறந்துகொண்டு உள் நுழைந்தது. கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயுதங்களுடன் தமிழ் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்த இனவாதிகள் தமிழ்க் கைதிகளை வெட்டி வீழ்த்தினர்.

என் கண்கள் தமிழீழத்தை காணட்டும் என்ற வீரமிகு பேச்சினை அறிந்திருந்த சிங்களக் கதைகளில் குட்டிமணியை வெட்டிக் கொன்று அவரது கண்களை பிடுங்கி எடுத்து தங்கள் கால்களால் நசுக்கி மகிழ்ந்தனர்.

குட்டிமணி உள்ளிட்ட போராளிகளின் உடல்களை இழுத்துச்சென்று சிறைச்சாலை முற்றத்தில் இருந்த புத்தரின் முன்னால் போட்டு மகிழ்ந்தாடினார்கள்.


இப்படியான வெறுப்புமிகு செயல்கள் தமிழ் இனத்தின் வரலாற்றில் தீராத துயராகவும் வடுவாகவும் படிந்துவிட்டது. பின்னாட்களில் இந்த வடுக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியது.

ஈழ மக்களின் தாயகக் கனவுக்காக தம்மை அர்ப்பணித்த குட்டிமணி, தங்கதுரை வரலாற்றின் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் வழிகாட்டினார். குட்டிமணியின் கனவு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் காலத்தில் சாத்தியமானது.

குட்டிமணியின் கண்கள் காணாத தமிழீழம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலத்தில் நிகழ்ந்தது. இன நலன்களுக்காக இலட்சிய வேள்வியில் தம்மை மாய்த்த இந்த மாவீர்ர்கள் தமிழ் சமூகத்திற்கு மாத்திரமின்றி உலகச் சமூகத்திற்கே உன்னத வழிகாட்டிகளாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

பொறுப்பு துறப்பு!


இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
25 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

Read More

Previous Post

நீதிமன்றத்தில் வழக்குகள் முடிக்கப்பட்ட 100 கிலோகிராம் போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படும்!  – Sri Lanka Tamil News

Next Post

PM Modi | இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்தில் 2-வது வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. ஆதரவு கருத்துக்கு நன்றி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
PM Modi | இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்தில் 2-வது வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. ஆதரவு கருத்துக்கு நன்றி! | India News (இந்தியா செய்திகள்)

PM Modi | இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்தில் 2-வது வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. ஆதரவு கருத்துக்கு நன்றி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin