கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முறையான சோதனை
அசம்பாவிதங்களைத் தவிர்க்க முக்கியச் சாலைகள் மூடப்பட்டு, பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதையடுத்து, கிளேட்டன் பூங்கா பகுதியில் வைத்து அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முறையான சோதனைக்குப் பின் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிசெய்யப்பட்டு அப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

