கண்டி–யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, அலவத்துகொட– குருகொட பகுதியில் இன்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு தற்காலிகமாக மூடப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
முந்தைய நாள் குருகொடவில் உள்ள 7ஆவது மைல்கல் அருகே நடந்த வீதி விபத்தில் சிக்கிய ஒரு பிரைம்மூவர் மற்றும் அதன் டிரெய்லரை மீட்டு அகற்றுவதற்கு வசதியாக இந்த மூடல் செய்யப்படுகிறது.
எனவே அவ்வீதியினூடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

