வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா – 2026 ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் அதற்கான தயார்நிலை மற்றும் பெரஹரா ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது
.
பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பெரஹராவைக் காண்பதற்காக வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும், பெரஹராவிற்கு யானைகளைச் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கண்டி எசல பெரஹராவை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவையும் தலையீட்டையும் அரசாங்கம் வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார். (a)


