Last Updated:
சிறுவயதில் லலித் பட்டிதார் பள்ளிக்கு செல்லும் போது அவரை பார்த்து மற்ற மாணவர்கள் பயந்துள்ளார்கள். இதுபோன்று பல அவமானகரமான சம்பவங்களை அவர் எதிர் கொண்டார்.
கண்கள், வாயை தவிர்த்து முகத்தின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்த நபர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் உலகின் முக்கிய ரிக்கார்டாக கருதப்படும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சாதனைகள், இயற்கையின் வினோதங்கள் போன்றவை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகின்றன.
1955 ஆம் ஆண்டு முதல் இந்த புத்தகத்தில் சாதனைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதை பெரும்பாலானோர் பெருமைக்குரிய விஷயமாக கருதுகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதாகும் இளைஞர் லலித் பட்டிதார் என்பவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது முகத்தில் 95% முடி காணப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் werewolf syndrome என்று அழைக்கிறார்கள். இது 100 கோடி பேரில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இப்படி முகத்தில் அதிகமாக முடி காணப்பட்டதால் லலித் ஏராளமான பிரச்சனைகளை தனது சிறு வயதிலிருந்து எதிர்கொண்டுள்ளார்.
பின்னாளில் அந்த முடிகளே அவருக்கு அடையாளமாக மாறிப் போனது. சிறுவயதில் லலித் பட்டிதார் பள்ளிக்கு செல்லும் போது அவரை பார்த்து மற்ற மாணவர்கள் பயந்துள்ளார்கள். இதுபோன்று பல அவமானகரமான சம்பவங்களை அவர் எதிர் கொண்டார்.
இருப்பினும் மற்றவர்களுக்காக தனது முக அமைப்பை அவர் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. தனது தனித்துவத்தை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அவர் யூடியூபராகவும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இத்தாலியன் மிலன் நகருக்கு சென்ற லலித் பட்டிதாரை கின்னஸ் சாதனைக்காக முகத்தில் உள்ள முடியின் நீளத்தை நிபுணர்கள் அளவீடு செய்தனர்.
இந்நிலையில் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரிடம் சிலர் முகத்தோற்றத்தை மாற்றுமாறு கூறியுள்ளனர். இருப்பினும் தனது இயற்கையான முகத்தை அவர் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. தற்போது அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
March 08, 2025 3:45 PM IST


