• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப் பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு மகாநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இன்று (28) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.


கடந்த 26ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹேஷ்’ (Hash) போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

 தடுத்து வைத்து விசாரணை

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட 22 பேரும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | 22 Sri Lankan Monks Arrested With Rs 1 1 Bn Drugs



அதேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு மீகஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து பயணம் 

கைது செய்யப்படும் போது அவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | 22 Sri Lankan Monks Arrested With Rs 1 1 Bn Drugs


இவரே குறித்த பிக்குகளின் தாய்லாந்து பயணத்தை ஒருங்கிணைத்ததோடு, வட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தொடர்புகளைப் பேணியவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில், பிக்குகளுக்குச் சமூகத்தில் வழங்கப்படும் கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்தி, காவி உடை அணிந்து இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் “பிக்குகளாகத் தோற்றமளிக்கும் போலி நபர்கள்” எனச் சாடியுள்ளனர்.

இந்தநிலையில், மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, அமைச்சு மட்டத்திலான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

Next Post

மொத்தமே 75 வீடுகள்… 51 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய கிராமம் – எங்கே இருக்கு தெரியுமா?

Next Post
மொத்தமே 75 வீடுகள்… 51 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய கிராமம் – எங்கே இருக்கு தெரியுமா?

மொத்தமே 75 வீடுகள்... 51 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய கிராமம் - எங்கே இருக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin